எஸ்பிஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மாநகர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
மாநகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளை ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மதுரை மாநகரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் 53 கிளைகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் 4 பிரிவுகளாகப் பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement