[X] Close >

மருத்துவமனையில் அனுமதித்த அன்றே கொரோனாவால் உயிரிழந்த 17 வயது இளம்பெண்

17-Old-young-girl-die--for-coronavirus-in-Chennai

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 17 வயது இளம்பெண் கொரோனாவால் உயிரிழந்தார்.


Advertisement

சென்னையில் கொரோனா வைரஸால் இதுவரை 18,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 1,072 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 9,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 9,066 சிகிச்சையில் உள்ளனர். அத்துடன் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இளம் வயதினும் அடக்கம்.

image


Advertisement

இந்நிலையில் சென்னையில் 17 வயது இளம்பெண் கொரோனா வைரஸால் இறந்துள்ளார். நேற்று மாலை 5.28 மணிக்குச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவு 9.35 மணிக்கு உயிரிழந்தார். முன்னதாக 2ஆம் தேதி அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியிருந்தது. அப்பெண்ணுக்கு முதல் வகை நீரழிவு நோய் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close