JUST IN

Advertisement

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பசியைப் போக்கும் 99 வயது பாட்டி - நெகிழ்ச்சி வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவை பார்சல் செய்யும் 99 வயது பாட்டி ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

image


Advertisement

மும்பை கராச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் இப்ராஹிம். இவர் நேற்று இரவு அவரது ட்விட்டர் பக்கத்தில் “தனது 99 வயது பாட்டி மும்பையில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உணவை பார்சல் செய்வதாக ஒரு பதிவை வெளியிட்டுவிட்டு அத்துடன், அவரது பாட்டி உணவை பார்சல் செய்து கொண்டுள்ள வீடியோவையும் இணைத்திருந்தார். அந்தக் காணொளியில் இப்ராஹிமின் பாட்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காகச் சப்பாத்தியை மெதுவாகப் பொட்டலங்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்.

 

இதனை அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலே இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இந்தக் காட்சி தங்களின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாகவும், இப்ராஹிமின் பாட்டி நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்” எனக் கூறினர்.


Advertisement

 

இந்தியாவில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வறுமையால் நடைப்பயணமாகவே அவர்களின் சொந்த ஊருக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement