ஊரடங்கு 5.0: எதற்கெல்லாம் தமிழகத்தில் தடை தொடரும்? முழு விவரம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு 5.0-ல் எதுக்கெல்லாம் தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது


Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரம்,

  • வழிப்பாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்
  • நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களூக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
  • தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும் மருத்துவத்துறை, காவல்துறை, அரசு
    அலுவலர்கள், உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பயணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
  • வணிக வளாகங்கள்

image


Advertisement
  • பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும் இந்நிறுவனங்கள்
    இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பயணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்காக தடை நீடிக்கும்
  • மெட்ரோ ரயில்/ மின்சார ரயில்
  • திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத்
    தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்

image

  • அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும்
    ஊர்வலங்கள்
  • மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது
  • திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது

வாட்ஸ் அப்பில் புகார்: 24 நேரத்தில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நடவடிக்கை

loading...

Advertisement

Advertisement

Advertisement