பிரபல திரைப்பட நடிகரான வித்யூத் ஜம்வால் தனது சமூக வலைத்தளங்களைப் பொருளாதார சேவைக்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் வித்யூத் ஜம்வால். இவர் இந்திப் படங்கள் மற்றும் சில மொழிகளிலும் நடித்துள்ளார். ஸ்டண்ட் கலைஞரான இவர் நடிகராகவும் திகழ்கிறார். கடந்த 2 மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்த இவர், தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களைப் பொருளாதார சேவைக்காகப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொரோனா வைரசிலிருந்து அனைவரும் மீண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள அவர், “இந்த பொது முடக்கத்தில் எப்படி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உறுதியாக இருக்க வேண்டும் என சமூக வலைத்தள வாசிகளுக்குத் தெரிவித்து வந்தேன். அவர்கள் அதைப் பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தற்போது பொருளாதார சேவை குறித்து சொல்லப்போகிறேன். நீங்கள் எந்தத் தொழில் தொடங்கினாலும், செய்தாலும் அல்லது பொருட்களை விற்றாலும் அதை https://www.actionherofilms.in இணையதளத்திற்கு அனுப்புங்கள். உங்கள் சேவை மீது எனக்கு நம்பிக்கை வந்தால், அதை நான் எனது சமூக வலைத்தள பக்கத்தில் இலவசமாகப் பகிருவேன்”எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்