“ எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்”- நகைக்கடை தொழிலாளர்கள் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொது முடக்கம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நிவாரண நிதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் அதிக அளவு தங்க நகை ஆபரணங்கள் செய்யக்கூடிய தொழிலாளிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாகும். இந்தியாவில் சிறு நகைகளான மூக்குத்திகள், ஜிமிக்கிகள், குழந்தைகளுக்கான மோதிரங்கள் உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் 5-ம் இடத்திலும், தமிழகத்தில் நகை உற்பத்தியில் கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திலும் உள்ளது. குறிப்பாக, சிறு நகை வர்த்தகத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை தேவையை விழுப்புரம் பூர்த்தி செய்து வருகிறது.

image


Advertisement

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - மோதல் ஏற்பட்டதால் சிறைக்குச் சென்ற இளைஞர்கள் 

ஊரடங்கு உத்தரவால் இங்கு நகை செய்யும் 10 ஆயிரம் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், இந்த தொழிலை சார்ந்துள்ள மிஷின் கட்டிங், மெருகேற்றக்கூடிய பட்டறை, கம்பி தகடு உருவாக்கும் பட்டறைகளும் பூட்டிக்கிடப்பதால் அந்த கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

நகைத் தொழில் மற்ற தொழில்கள்போல் அல்லாமல் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் பொதுமக்கள் நகைக் கடைகளுக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். ஏற்கெனவே கையிருப்பில் உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு மேலும் மூன்று மாதத்திற்கு மேல் ஆகும். இந்த நிலையில் தங்க நகை ஆபரணங்கள் செய்வதற்கு தொழிலாளிகள் வெளியூர்களிலிருந்து வருவதற்கும் முறையான பேருந்து வசதி இல்லாத நிலையும் இருந்து வருகிறது. மேலும் தற்போது ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கு உரிய கூலி வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.


Advertisement

image

பணத்திற்காக விற்கப்பட்ட  குழந்தை - புகார்  அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட மதுரை கலெக்டர் 

இந்த நிலையில் வேலை இல்லாத வறுமை பெருமளவு நகை தொழிலாளிகளை பாதிக்கும் என்கிறார்கள் அவர்கள். எனவே மற்றவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது போல நகை தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement