JUST IN

Advertisement

குஜராத்தில் இருந்து பீகாருக்கு புறப்பட்டு கர்நாடகாவில் வந்து நின்ற சிறப்பு ரயில்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் இருந்து பீகாருக்கு புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் கர்நாடகாவிற்கு சென்றதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.


Advertisement

ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் குறித்த நேரத்தில் சரியாக சென்றடைவதில்லை என்றும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து பீகாருக்கு புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் கர்நாடகாவிற்கு சென்றதாக டெக்கான் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின்படி,

image


Advertisement

குஜராத்தில் இருந்து பீகாருக்கு புறப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில் கர்நாடகாவிற்கு சென்றதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அதேபோல 1200 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சூரத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பீகாருக்கு செல்லாமல் ஒடிசாவுக்கு சென்று நின்றதால் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. ரயில்வேயின் திட்டமும், கணினி முறைகளும் தடம்புரண்டு விட்டதாக பலரும் குற்றச்சாட்டியுள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரயில்வே நிர்வாகிகள் சிலர் இது குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி குஜராத்தில் இருந்து புறப்பட்ட ரயில் மகாராஷ்டிராவில் பாதை மாறிவிட்டதாகவும், பீகாருக்கு செல்லாமல் தென்பகுதியான பெங்களூரு நோக்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

ஷராமிக் ரயில்கள் மாநில அரசுகளின் வேண்டுகோளின்படியே இயக்கப்படுவதாகவும், இது எப்படி ரயில்வேயின் தவறு என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதே சமயம், ரயில் பாதைகளும், செல்லும் வழியும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் எப்படி வரும் என அவர் விளக்கமளிக்கவில்லை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

image

இது குறித்து தெரிவித்துள்ள ஷராமிக் ரயில் அதிகாரிகள், செல்லும் பாதை முக்கியமல்ல சேரும் இடம் தானே முக்கியம். நெரிசல்கள் காரணமாக நாங்கள் பாதையை மாற்றவேண்டி உள்ளது என தெரிவித்துள்ளதாக டெக்கன் ஹெரால்ட் குறிப்பிட்டுள்ளது.

மலையில் பின் தொடர்ந்த கரடி: சாமர்த்தியமாக தப்பித்த சிறுவன் - வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement