“இ பாஸ் இல்லை”- தமிழகம் வந்தவர்கள் மீண்டும் டெல்லிக்கே அனுப்பி வைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்த 4 பேர் தமிழ்நாடு இ-பாஸ் பெறாததால் மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Advertisement

கோவை விமான நிலையத்தில் இருந்து 61 நாட்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டது. விமான பயணிகள் நேரடியாக வீடுகளுக்கு அனுமதிக்கப்படாமல், கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்படுவது, கையில் சீல் வைப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விமான பயணிகளுக்கு தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இதில் ஒன்றாக, பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள், தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாதவர்கள் மாவட்டங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்த 4 பயணிகள் இ.பாஸ் பெறாததால் மீண்டும் அதே விமானத்தில் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement