இன்று முதல் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்''!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கொரோனா அதிகமுள்ள 33 வார்டுகளில் ''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்'' இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.


Advertisement

இதன்படி குறிப்பிட்ட பகுதியில் காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவருக்கும் முகாம்களில் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த திட்டத்தில் 120 சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர். எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனையும் நடமாடும் வாகனங்கள் மூலம் எடுக்கப்பட உள்ளன


Advertisement

image

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று நிலவரப்படி 84 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

loading...

Advertisement

Advertisement

Advertisement