JUST IN

Advertisement

புதுச்சேரியிலிருந்து கடலூர், நாகை வழியாக பேருந்து இயக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியிலிருந்து கடலூர், நாகை மாவட்டங்கள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மாநில அரசுகளே பேருந்து இயக்கம், சலூன் கடைகள் திறப்பு உள்ளிட்ட முடிவுகளை எடுத்துள்ளன.

image


Advertisement

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 200 பேருந்துகளுக்கு முதற்கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடலூர், நாகை வழியாகக் காரைக்கால் செல்லும் பேருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பேருந்து தமிழக மாவட்டங்கள் வழியாக செல்வதால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அவர்கள் உரியப் பாதுகாப்புடன் பேருந்தை இயக்குமாறு அனுமதி அளித்துள்ளனர். இதனால் பேருந்து இயக்கம் தொடங்கியுள்ளது.

கொடுத்த கடனை திரும்பக் கேட்டவர் கொலை : மதுரையில் இருவர் கைது..!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement