யுவராஜ் விடுத்த சவாலைச் செய்து முடித்த சச்சின் - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் மக்களின் பெரும்பாலான நேரம் சமூக வலைத்தளங்களிலே கழிகிறது. இதற்குப் பிரபலங்களும் விதிவிலக்கில்லை. அவர்களும் பாடல்களுக்கு டப் ஸ்மேஷ் செய்வது, தங்களது அன்றாட நடவடிக்கைகளைக் காணொளியாக வெளியிடுவது, சக வீரர்களுக்குச் சவால் விடுவது போன்ற குறும்பான விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

 


அந்த வகையில் நேற்று முன் தினம் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் யுவராஜ் பந்தைத் தொடர்ச்சியாக அடித்துக்கொண்டிருந்தார். அதன் மூலம் தான் இப்படித்தான் வீட்டிலிருந்து கொரோனாவுடன் போராடுவதாகவும், இந்தச் சவாலை சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிடவேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வீடியோ வெளியிட்டு, இந்தச் சவாலை கங்குலி, ஷிகர் தவான் உள்ளிட்டோருக்குப் பரிந்துரை செய்தார்.அவர்களைத் தொடர்ந்து தற்போது சச்சின் தெண்டுல்கரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சச்சின் தனது இரு கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு யுவராஜ் கொடுத்த சவாலைச் செய்துள்ளார். மேலும் இந்தச் சவாலை யுவராஜ் ஏற்றுக் காணொளி வெளியிட வேண்டும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement