தமிழகத்தில் இன்று 2வது நாளாக 500க்கும் குறைவாக 434 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 434 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.
செங்கல்பட்டு - 20, கடலூர் - 3, திண்டுக்கல் - 2, காஞ்சிபுரம் - 11, கன்னியாகுமரி - 4, மதுரை - 11, பெரம்பலூர் - 2, புதுக்கோட்டை - 1, ராணிப்பேட்டை - 2, தென்காசி - 2, தஞ்சை - 1, தேனி - 6, திருவள்ளூர் - 21, திருவண்ணாமலை - 4, தூத்துக்குடி - 10, நெல்லை - 22, விருதுநகர் - 2 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 2,599 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 7,435 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 71 பேர் பலியாகியுள்ளனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?