JUST IN

Advertisement

பொங்கலுக்கு திரைக்கு வரும் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இயக்குநர் சிவா, தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இடையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தேதி குறிப்பிடாமல் இதன் வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டன. 

image


Advertisement

தமிழ் சினிமாவின் பெரிய நடிகராக வலம் வரும் அஜித்தை அடுத்து, ரஜினியை வைத்து இந்தப் படத்தை சிவா இயக்கி வருவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனா, குஷ்பு ஆகிய இரண்டு நடிகைகளும் ரஜினியுடன் இணைந்துள்ளனர். மேலும், இளம் நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். ‘அண்ணாத்த’ இந்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.

முகக் கவசம், கிருமி நாசினி வழங்கி காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் சூரி!!

இதனிடையே, இதே அக்டோபர் மாதம் இன்னொரு பெரிய பட்ஜெட் படமான ‘கேஜிஎஃப் அத்தியாயம் 2’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்புவெளியானது. கடந்த 2018 ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது ‘கேஜிஎஃப் அத்தியாயம் 1’. அதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் யஷ் நாயகனாக நடித்திருந்தார். பல மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. பாலிவுட்டில் பெரிய வசூலை ஈட்டியது.


Advertisement

image

இந்த அறிவிப்பின்படி ‘கேஜிஎஃப் அத்தியாயம் 2’ படம் வெளியாகும் பட்சத்தில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் மோத வேண்டிய சூழல் உருவாகும் எனப் பேச்சு அடிப்பட்டது. இது இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பாதிக்கலாம் என்றும் ஆகவே ரஜினியின் படம் வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் கசிந்தன.

image

இந்நிலையில் ‘அண்ணாத்த’ தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று ‘சன்பிக்சர்ஸ்’ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ‘கேஜிஎஃப் அத்தியாயம் 2’ படத்துடன் ரஜினியின் படம் மோதுவதை தயாரிப்பாளர் தரப்பு தவிர்த்துள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement