மதுபான பாட்டில்களை திருடி விற்ற டாஸ்மாக் மேற்பார்வையாளர்: கைது செய்த போலீசார்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் மே 7-ம் தேதி திறக்கப்பட்டது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு நாட்கள் டாஸ்மாக் திறக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான விற்பனையின்போது, எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என அவசர வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.


Advertisement

image

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.


Advertisement

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்ற கடையின் மேற்பார்வையாளரையும், அவருக்கு உதவியாக இருந்தவரையும் போலீசார் கைது செய்தனர்.

image

திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்றுள்ளனர். இது தொடர்பாக கடையின் மேற்பார்வையாளர் கார்த்திக்கேயன் (42), அவருக்கு உதவியாக இருந்த கார்த்திகேயன் (45) ஆகிய இருவரையும் துவாக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 103 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Advertisement

திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகள் விலை குறைவு

loading...

Advertisement

Advertisement

Advertisement