JUST IN

Advertisement

சென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா : மாவட்ட வரியாகப் பட்டியல் விவரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

image


Advertisement

அத்துடன் மாவட்ட ரீதியான எண்ணிக்கையில் சென்னை 3,839 பேர் பாதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம். அரியலூர் - 4, செங்கல்பட்டு - 43, கடலூர் - 1, காஞ்சிபுரம் - 8, கரூர் - 1, கிருஷ்ணகிரி - 10, மதுரை - 4, பெரம்பலூர் - 9, புதுக்கோட்டை - 1, ராமநாதபுரம் - 1, ராணிப்பேட்டை - 6, தேனி - 6, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 47, நெல்லை - 10, வேலூர் - 3, விழுப்புரம் - 6, விருதுநகர் - 2 என கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி : வெளியானது பட்டியல் விவரம்

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 5,195 பேர் சிகிச்சை உள்ளனர். மேலும், 47 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement