கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக தணிகாசலம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனாவை குணமாக்க இதுவரை அதிகாரப்பூர்வமாக மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் அதற்கான ஆய்வை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து தன்னிடம் உள்ளதாகவும், கொரோனாவை தன் உடம்பில் செலுத்தினால் தன்னுடைய மருந்தினால் மீண்டு வந்து நிரூபிக்கிறேன் எனவும் இணையத்தில் வீடியோக்கள் மூலம் பரபரப்பை கிளப்பினார் தணிகாசலம். இவர் தன்னை சித்த மருத்துவர் எனக் கூறி வந்தார். இதனையடுத்து தணிகாசலம் மீது சுகாதாரத்துறை சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரை அடுத்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக தணிகாசலம் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தணிகாசலத்தை கைது செய்துள்ளனர்
Loading More post
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை