JUST IN

Advertisement

 “பசிக்கும் தடுப்பூசி கண்டுபிடித்தால் நல்லா இருக்கும்” - விஜய் சேதுபதி டவீட் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வறுமையில் வாடுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டு விஜய் சேதுபதி ஒரு கருத்தை ட்விட்டரில் கூறியுள்ளார்.  
 
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப் போய் உள்ளனர். வெளி நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால் தினக்கூலிகளான  லட்சக் கணக்கான மக்கள் நாட்டில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். 
 
image
 
நாளுக்கு நாள் இந்த நிலைமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் கொரோனாவின் தாக்கம் மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் மட்டும் இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 46,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 3,646,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
image
 
இதனிடையே தமிழகத்தைப் பொறுத்தளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாகச் சென்னையில் தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 
 
ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் 527 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
 
image
இதற்கிடையே மற்ற தொழில் துறைக்கு விதிமுறைகளை தளர்த்தி அறிவிக்கப்பட்டதைப் போல சினிமா துறைக்கும் சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என ஆர்.கே. செல்வமணி, தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்திருந்தார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை செய்வதற்காகவாவது அனுமதி வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலச் சூழலை மறைமுகமாகக் குறிப்பிட்டு சொல்வதைப் போல நடிகர் விஜய் சேதுபதி ஒரு கருத்தை அவரது ட்விட்டரில் கூறியுள்ளார். அதில், “பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement