JUST IN

Advertisement

கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களை கிராமப் பகுதியில் தனிமைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து வந்தவர்களை தங்கள் பகுதியில் தனிமைப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

image

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து வந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.


Advertisement

அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல்: பலியாகும் பன்றிகள்!!

image

”கொரோனா காலத்திலும் முதலமைச்சர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்”-மு.க.ஸ்டாலின்


Advertisement

இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தும் நோக்கில் கோயம்பேடு பகுதியிலிருந்து வந்த 50-க்கும் மேற்பட்டோரை பெரம்பலூர் அருகே உள்ள பசும்பலூர் பகுதியில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மண்ணெண்ணெய், பூச்சி மருந்துகளை கையில் வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி அதிகாரிகளை மிரட்டியுள்ளனர்.

அதனால் கோயம்பேடு தொழிலாளர்களை பசும்பலூர் கிராமத்தில் தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பொதுமக்களின் மிரட்டலால் வருவாய்த்துறை அதிகாரிகளும் சுகாதாரத்துறை பணியாளர்களும் வேறு ஊரில் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement