கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும், அமெரிக்காவும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில், வைரஸ் பற்றிய போதிய தகவல்களைச் சீனா பகிரவில்லை என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கொரோனாவை சீனாதான் உருவாக்கியது என்றும் அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தெரிவித்து வருகிறார்.
மேலும்,கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டறிவதற்காக தங்களது விசாரணைக் குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால் சீனா மறுத்துவிட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்து வரும் சீனா, அமெரிக்க ராணுவம் தான் கொரோனாவை உருவாக்கி இருக்க வேண்டுமென பதில் கூறியது.
இது தொடர்பாக பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், எந்த நேரத்திலும் உலகின் எந்தவொரு நாட்டிலும் அந்த வைரஸ் தோன்றலாம் என்றும், எனவே இந்த விவகாரத்தில் சீனாவைக் குற்றம்சாட்ட வேண்டாம் என்றார். மேலும், வைரஸை சீனா உருவாக்கிப் பரப்பிவிடவில்லை என்பதை அமெரிக்கா உணர வேண்டும் .வைரஸ் பரவிய நாள் முதல் அது தொடர்பான தகவல்களை உலக நாடுகளிடம் வெளிப்படையாகப் கூறி வருகிறோம் என விளக்கம் அளித்தார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சீனாவும், அமெரிக்காவும் மாறிமாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் கொரோனா குறித்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவியதா அல்லது சீனாவில் ஏதேனும் ஆய்வகத்தில் இருந்து விபத்தின் விளைவாக வெளியேறியதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.
Loading More post
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'