கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலர்களை கவுரவிக்கும் "கொரோனா விழிப்புணர்வு கீதம்" பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர அரசு தடை விதித்துள்ளது. ஆனால் உத்தரவை மீறி பல்வேறு பொதுமக்கள் வெளியே சுற்றி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடும் வெயிலிலும் பெண் காவலர்கள் சாலைகளிலும், ரோந்து பணியிலும், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெண் காவலர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக "கொரோனா விழிப்புணர்வு கீதம்" என்ற பாடலை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் இன்று வெளியிட்டார். இந்த குறும்படத்தினை காவல் ஆணையர் ஆலோசனையின் படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில், தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்சமாம் அல் ஹக் எழுதிய இப்பாடலுக்கு இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்துள்ளார். பிரியா ஹிமேஷ், மாளவிகா ராஜேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை