JUST IN

Advertisement

இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ரஜினி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம், சின்ன திரை நடிகர் சங்கம் என திரைத்துறை துறை சங்கங்களில் உள்ள ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். 
 
image
 
நாடு முழுவதும் 144 தடை அமலில் உள்ளதால் திரைத்துறை தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் இயக்குநர் சங்கத்தில் உதவி இயக்குநர்கள், நலிந்த இயக்குநர்கள் சுமார் 1500 பேர் உள்ளனர். இவர்களுக்கு உதவி வழங்க நடிகர் ரஜினிகாந்த் 24 டன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளார். இதேபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கும் அதே நிவாரண பொருட்களை வழங்குகிறார். 
 
இந்தத் திரைத்துறை சங்கங்கள் தவிரச் சின்ன திரை நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் சம்பந்தப்படச் சங்கங்களுக்கு (தலா 24 டன்) வழங்கப்பட்டுள்ளது. சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நாளை முதல் இந்த நிவாரண பொருட்களை வழங்க உள்ளனர்.
 
image
 
இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஐ நெருங்கி உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 908 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement