தேனி: கள்ளச் சாராயத்திற்கான ஊறல் போட்ட 2 பேர் கைது

Two-arrested-for-anti-money-laundering-activities-Where-

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்ட இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் பலரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இது கிராமபுறங்களில் கள்ளச் சாராயம் காய்ப்பதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. முன்னதாக மதுரை உள்ளிட்ட இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சியதாக கூறி பலர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் போட்ட இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணா பல்கலை துணை வேந்தர்...!

image

டெல்லி சந்தையில் காற்றில் பரந்த சமூக இடைவெளி

கண்டமனூர் ராஜேந்திரா நகரில் உள்ள தோட்டத்தில் சகோதரர்கள் இருவர் கள்ளச் சாராயம் காய்ச்சி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து நிகழ்விடத்திற்குச் சென்ற
காவல்துறையினர், அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுக்கொண்டிருந்த மலைச்சாமி மற்றும் தோட்டக் கா‌வலாளி முருகன் ஆகியோரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது
செய்தனர். மேலும், 150 லிட்டர் ஊறல் பானையை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மலைச்சாமியின் சகோதரர் வேல்சாமியை காவல்துறையினர் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement