ஊரடங்கு எதிரொலி: கோடைக்கால வீட்டுச் சாதனங்களின் விற்பனை வீழ்ச்சியடையும் என கணிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு உத்தரவால், கோடைக்கால வீட்டுச் சாதனங்கள் விற்பனை வீழ்ச்சியடையும் என ஃப்ரிட்ஜ், ஏசி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன


Advertisement

கொரோனா தடுப்புக்காக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு காலம் முடிந்தாலும், அதன் பாதிப்பு, அடுத்து வரும் மாதங்களுக்கும் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணம், வருமான வரி உள்ளிட்ட செலவினங்கள் அதிகம் என்பதால், கோடைக்கால வீட்டுச் சாதனங்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என ஃப்ரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன,

image


Advertisement

ஊரடங்கு காரணமாக, சுமார் 30% வரை கோடைக்கால விற்பனை சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த 20ஆம் தேதி முதல் செல்போன் விற்பனை ஆன்லைனிலும், கடைகளிலும் முற்றிலும் நின்றுள்ளது. அதன் விற்பனையும் இந்த ஆண்டு இறுதி வரை 25 முதல் 30% வீழ்ச்சியை சந்திக்கும் என நுகர்வோர் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் நந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வுக்காக வீதி நாடகம் நடத்தும் காவல்துறையினர்

loading...

Advertisement

Advertisement

Advertisement