கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு முதல் ஊரடங்கு கட்டுப்பாடு குறித்த ஆலோசனை வரை..!

today-headlines

ஊரடங்கை கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்துவது குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை எனத் தகவல். பொருளாதாரத்தை விட உயிரே முக்கியம் எனக்கூறி ஊரடங்கை நீட்டிக்க தெலங்கானா முதல்வர் கோரிக்கை.


Advertisement

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி. விரைவில் நலம் பெற ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்து.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு.


Advertisement

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் மேலும் 48 பேருக்கு கொரோனா. சென்னையில் இதுவரை 110 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்.

விமான பயணத்தில் கோரோனா வைரஸ் ...

கோவையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்தனர். 10 மாதக்குழந்தையும் குணமடைந்ததாக அறிவிப்பு.


Advertisement

கொரோனா தொற்றை கண்டறிய ஒரு லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் வாங்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தகவல். தமிழகத்தில் மேலும் 21 பரிசோதனை மையங்களுக்கு அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் பேட்டி.

எம்.பி.க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. இரண்டாண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு.

கேரளாவைச் சேர்ந்த செவிலியருக்கு ...

மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சீல் வைப்பு. அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நடவடிக்கை.

கொரோனா வைரசின் கோரப்பிடிக்கு இந்தியாவில் இறந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு. உலகெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement