JUST IN

Advertisement

''அது அன்பு, மரியாதை...'' - 'சின்ன தல' பெயர் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட ரெய்னா!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் அணிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. வழக்கமாக சென்னை அணியில் விளையாடும் வீரர்களை தமிழ் ரசிகர்கள் செல்லப்பெயர் வைத்து அழைப்பார்கள். தோனிக்கு 'தல' என்றும், ஹர்பஜனுக்கு 'புலவர்' என்றும் செல்லப்பெயர் உண்டு. கேப்டன் தோனியும் 'தல' என்ற செல்லப்பெயர் குறித்து அடிக்கடி நெகிழ்ந்து பேசியுள்ளார்.


Advertisement

image

ரசிகர்களின் அன்பை பெற்றதை நான் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒட்டுமொத்த தமிழ்மக்களும் என்னை 'தல' என்றே அழைக்கிறார்கள். இது ரசிகர்கள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பெயர் என்று தோனி கூறியுள்ளார். சென்னை ரசிகர்களுக்கு தோனி தல என்றால், சுரேஷ் ரெய்னா 'சின்ன தல'.


Advertisement

 image

இப்படி சென்னை ரசிகர்கள் செல்லப்பெயர் வைத்து அன்பை பொழிந்து வரும் நிலையில் 'சின்ன தல' பெயர் குறித்து ரெய்னாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகல் ரெய்னாவிடம் ட்விட்டரில் கேள்வி ஒன்றை கேட்டார். அதில், ''ஒரு முறை தல என்ற செல்லப்பெயர் குறித்து நான் தோனியிடம் கேட்டேன். நீங்கள் சின்ன தல என்று அழைக்கப்படும் போது எப்படி உணர்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

அதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ள ரெய்னா, ''இது என்னை சொந்த வீட்டை போல உணர வைக்கும். சென்னை குடும்பம் எனக்காக கொடுத்த அன்பு, மரியாதை. என்னை ஏற்றுக்கொண்டதன் அடையாளம்'' என தெரிவித்துள்ளார்.

“கேப்டன் என்பதால் வித்தியாசமாக நடக்க தேவையில்லை” - கோலி விளக்கம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement