தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவருடன் தொடர்பிலிருந்த ஈரோட்டைச் சேர்ந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அமலாகும் இந்த உத்தரவு மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், “பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முழுவதுமாக கொரோனா சிகிச்சைக்காக மையமாக மாறியிருப்பதாகக் கூறினார். கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினருடன் சேர்த்து இது வரை 15 பேர் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் 169 வீடுகளைச் சேர்ந்த 694 நபர்கள் தனிமைப்படுத்தி வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் அவர்களுக்கு கைகளில் முத்திரை அளிக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் உடனடியாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு” அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தை முடக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை என்றும் மாலை இது குறித்துத் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் அது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.
கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர், புதியதலைமுறை தொலைக்காட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வதந்தி பரப்பதாக கோபிச்செட்டிபாளையத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் கட்டாயம் கைகளைக் கழுவ வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். முகக்கவசங்கள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறிய ஆட்சியர் கதிரவன், காய்கறி மார்க்கெட்டில் மக்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
Loading More post
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு: ஆன்லைன் மூலம் கையெழுத்தான ஒப்பந்தம்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?