JUST IN

Advertisement

கொரோனா எதிரொலி : எழும்பூர் ரயில் நிலைய 3 நுழைவுவாயில்கள் மூடல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தின் 3 நுழைவுவாயில்கள் மூடப்பட்டன.


Advertisement

கொரோனாவைத் தடுப்பதற்காக பொது இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. இங்குள்ள மொத்தம் 7 நுழைவுவாயில்களில் 4 வழிகளில் ம‌ட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

image


Advertisement

கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்களை ரயில்வே காவல்துறை டிஎஸ்பி எட்வர்டு, ஆய்வாளர் தாமஸ் ஏசுதாசன் உள்ளிட்டோர் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கினர். ஏற்கனவே ரயில் நிலையத்தில் மருத்துவக்குழுவினர் நிறுத்தப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் கொரோனா வைரஸ் அறிகுறிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

65 ரயில்வே காவல்துறையினர், 25 ரயில்வே பாதுகாப்புப் படையினர், செவிலியர் கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement