கொரோனா வைரஸ் தாக்குதலால் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மந்தநிலையிலிருந்து மீட்டெடுக்க பல்வேறு நாடுகள் மிகப்பெரிய அளவில் ஊக்கத்தொகைகளை வழங்கி உதவி வருகின்றன.
ஜெர்மனியை பொருத்தவரையில் கொரோனாவால் நிலைகுலைந்துள்ள நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாக்க தற்போது அந்நாட்டின் வளர்ச்சி வங்கி இந்திய மதிப்பில் 45 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஈடான தொகையை கடனாக வழங்கியுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தொகையானது 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின்போது வழங்கியதைவிட அதிகத் தொகையாகும்.
கொரோனா வைரஸின் தொடக்க புள்ளியாக அமைந்த சீனாவில் தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் பொருட்டு அந்நாட்டு மைய வங்கி 5 லட்சத்து 84 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. இதுதவிர இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்ததோடு, நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல, இத்தாலி அரசு பொருளாதார சரிவை மீட்டெடுக்க உதவியாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது. கொரோனா வைரஸால் 99 சதவிகித ஊழியர்களின் ஊதிய பாதிப்பை ஈடுசெய்ய பிரான்ஸ் நாட்டு அரசு 83 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
32 ஆயிரத்து 560 கோடி ரூபாய் கொரோனா நெருக்கடி நிதியை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரியா, உத்தரவாதத்துடன் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதவிர, பணி நேரத்தை குறைத்தும், வரி வசூலை ஒத்திவைத்தும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க ஸ்வீடன் அரசு, வங்கிகள் மூலமாக நிறுவனங்களுக்கு 3 லட்சத்து 84 ஆயிரத்து 800 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதேபோல, பிரிட்டன் அரசு 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயையும், சுவிட்சர்லாந்து அரசு 77 ஆயிரத்து 700 கோடி ரூபாயையும் வழங்கி நிறுவனங்களை ஊக்குவிக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.
இதுதவிர, ஜப்பான் 29 ஆயிரத்து 600 கோடி ரூபாயையும், அமெரிக்கா 61 ஆயிரத்து 420 கோடி ரூபாய் அளவிற்கும், தென் கொரியா சுமார் 72 ஆயிரத்து 520 கோடி ரூபாய் அளவிற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஊக்கத்தொகைகளை வழங்கியுள்ளன.
கொரோனா எதிரொலி: சென்னையில் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வரும் 'Work From Home'
Loading More post
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை
வெற்று பேச்சுகள் தேவையல்ல, நாட்டிற்கு தீர்வைக் கொடுங்கள்: ராகுல் காந்தி
ஆக்சிஜன் வாகனங்களை தடுத்து நிறுத்தக்கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அரசின் பொறுப்பை நீதிமன்றம் சொல்லும் நிலைமை பெருமைக்குரியதா? : கமல்ஹாசன்
மேற்குவங்கத்தில் பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ