‘கொரோனாவை ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம்’ - ரோகித் அன்பு வேண்டுகோள்

Coronavirus-advice-from-Rohit-Sharma

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் அதுதொடர்பான விழிப்புணர்வுகளை பிரபலங்கள் பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் துணைக்கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் ஷர்மா விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “நான் சில விஷயங்களைப் பற்றி பேசப் போகிறேன். கடந்த சில வாரங்களாக உலகில் இருக்கும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் கடினமான ஒன்றாக மாறி ஸ்தம்பிக்க வைத்துள்ளது.


Advertisement

image

நாம் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்ப ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிராக நிற்க வேண்டும். அதற்காக நாம் சிலவற்றை செய்யவேண்டும். உங்களுக்கு நோய் அறிகுறி எதுவும் தென்பட்டால் உடனே அருகில் இருக்கும் மருத்துவரை அணுகுங்கள். ஏனென்றால் நம் அனைவரது குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும், மால்களுக்கும், திரையரங்குகளுக்கும் செல்ல வேண்டும்.

image


Advertisement

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். இறுதியாக ஒன்று. கொரோனா வைரஸால் இறந்தவர்களுக்கு எனது இதயப்பூர்வ இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்தார்.

சென்னையிலிருந்து பாகிஸ்தானிற்கு உளவு வேலை - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement