JUST IN

Advertisement

கோடிக்கணக்கில் உயிர்களை பலிகொண்ட தொற்று நோய்கள்: 100 ஆண்டுகள் வரலாறு சொல்வது என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த ஒரு நூற்றாண்டில் உலகளவில் எங்கு எல்லாம் என்னென்ன பெருந்தொற்று நோய்ப் பரவின, அவை எத்தனை உயிர்களைப் பலிகொண்டன? என்பன பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


Advertisement

image

இன்றைக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. ஆனால், இதற்கு முன்னர் உலகளவில் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த நோய் ‘எய்ட்ஸ்’. கடந்த 1976ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசிலிருந்து எய்ட்ஸ் பரவியது. 1990 மற்றும் 2000ஆவது ஆண்டுகளில் மோசமான இந்த நோய் தாக்கத்தை ஏற்படுத்தியது. எய்ட்ஸுக்கு இதுவரை சுமார் மூன்று கோடியே 60 லட்சம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் பற்றி தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு மற்றும் உயர்தர மருத்துவம் காரணமாக, அந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது.


Advertisement

image

எய்ட்ஸை போன்று மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மற்றொரு பெருந்தொற்றுநோய் ‘சார்ஸ்’. நுரையீரல் அழற்சி நோயான இது 2002ஆம் ஆண்டு ஹாங்காங்கில் இருந்து பரவி 2003 ஆம் ஆண்டு ஜூலை வரை இந்தியா உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 11 சதவிகிதம் பேர், அதாவது ஆயிரத்துக்கும் குறைவானோர் மரணமடைந்ததாக, புள்ளி விவரம் கூறுகிறது. 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

image


Advertisement

எய்ட்ஸ்க்கு முன்னர் உலகை மிரட்டிய மற்றொரு கொடிய நோய் ‘ஃப்ளூ’ எனப்படும் சளிக்காய்ச்சல். 1968இல் முதன்முதலாக ஹாங்காங்கில் உருவான இந்த நோய், ‘ஃப்ளூ 2’ என்றழைக்கப்பட்டது. இதற்கு முன்னரும் ஒருமுறை ‘ஃப்ளூ’ பரவியிருந்ததால், இம்முறை ‘ஃப்ளூ 2’ என்றழைக்கப்பட்டது. இது இந்தியா, சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இருந்தாலும் மற்ற பெருந்தொற்று நோயைவிட ஃப்ளூ 2ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இந்நோய்க்கு சுமார் பத்து லட்சம் பேர் உயிரிழந்தனர்.

இதற்கு முன்னர் பரவிய கொடிய நோய் ‘ஆசியன் ஃப்ளூ’. சீனாவில் 1956ஆம் ஆண்டு பரவிய இந்நோய் சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் உயிர்களைக் கொன்றது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

image

கடந்த 1918ஆம் ஆண்டு பரவி 1920 வரை உலகை அச்சுறுத்திய ஃப்ளூ என்ற சளிக்காய்ச்சலுக்கு அப்போது 2 கோடி முதல் சுமார் 5 கோடி பேர் வரை மாண்டனர். 1918ல் ஃப்ளூ காய்ச்சலால் சுமார் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இந்நோயால் ஏற்பட்ட இறப்பு விகிதம் உலக அளவில் பத்து முதல் இருபது சதவிகிதம் வரை இருந்தன. ஃப்ளூ காய்ச்சல் பரவிய முதல் 25 வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி பேர் உயிரிழந்தனர். இதில் சிறார்களும் முதியோரும் பெருமளவில் அடங்குவர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement