[X] Close >

கொரோனா அரக்கனை தீயிட்டு கொளுத்திய மக்கள்

People-who-set-fire-to-the-Corona-monster




Advertisement

வட இந்தியாவில் கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து, அந்த உருவத்தை மக்கள் தீ வைத்து கொளுத்தினர்.

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநில மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஹோலி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அச்சறுத்தலை ஏற்ப்படுத்தியபோதும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கரைத்த நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

கலை பொக்கிஷங்களை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை- பாண்டியராஜன்

image

அந்த வகையில் மும்பையின் வொர்லி பகுதியில், ஹோலி பண்டிகையின் ஒரு பகுதியாக அரக்கனின் உருவத்தை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து, அதன் உருவம் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தடுப்பூசி போன்ற வடிவத்தில் நெருப்பு கொண்டுவ‌ரப்பட்டு, கொரோனா அரக்கனை மக்கள் எரித்தனர்.


Advertisement

உலகை அச்சுறுத்தும் கொரோனா: அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

image

சீனாவில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமானோரை பலி கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இதனால் அங்குள்ள தென்னிந்திய உணவகங்களில் இந்திய உணவு வகைகளும் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close