அரையிறுதிப் போட்டி மழையால் ரத்து: முதல்முறையாக இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மழையால் இங்கிலாந்து உடனான அரையிறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.


Advertisement

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா இன்று களமிறங்கியது. குரூப் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற அணி என்ற சிறப்போடு அரையிறுதியில் அடியெடுத்து வைத்தது இந்தியா. இந்திய அணியில் ஷபாலி வர்மா, பூனம் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டு வருகின்றனர். குரூப் சுற்றில் பலமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை இந்தியா வீழ்த்தி அசத்தியிருந்தது.

image


Advertisement

நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் ஷபாலி வர்மா 


அரையிறுதிப் போட்டி நடைபெறும் சிட்னி நகரில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. சிட்னி நகரில், இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி தாமதமானது. தொடர்ந்து மழையின் குறுக்கீடு இருந்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

        image


Advertisement

போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. போட்டி விளையாடாமலேயே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ரசிகர்களுக்கு சற்றே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மழையால் அரையிறுதிப் போட்டி கைவிடப்பட்டது இங்கிலாந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

image


‘தல’.. இந்தப் பெயர்தான் எனக்கு நிறைய ரசிகர்களை கொடுத்தது : உருகிய தோனி..! 


இருப்பினும், மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது மகிழ்ச்சியாக விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதியான அணிதான் என்பது, அதன் முந்தைய வெற்றிகள் சொல்லும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement