கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இனி இந்தியாவில் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கடந்த திங்கட்கிழமை வெளியான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
‘சொல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது’: ஐடி ஊழியர்களுக்கு கர்நாடக அரசு நிபந்தனை..!
இந்த நிலையில்தான், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்துள்ளார். இது பல்வேறு மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
3,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள் : எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் ?
கொரோனா வைரஸ் ஒரு நோய் தொற்று கிருமி என்பதால் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தங்களது ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது " கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்கலைக்கழகத்தில் பயோமெட்ரிக் முறையிலான விரல் ரேகை வருகைப்பதிவு முறை ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் வருகைப் பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்