“கொரோனா வைரஸ் சோதனை முடிவு நெகட்டிவ்” - சமூக செயற்பாட்டாளர் சுனிதா கிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் சோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சுனிதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு மென்பொருள் பொறியாளர், தெலுங்கானாவில் கோவிட் 19ன் முதல் நோயாளி என்று திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டார். 24 வயதான இவர் ஹைதராபாத்தில் உள்ள அரசு காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெலுங்கானா சுகாதார அமைச்சர் இ.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

Image result for கொரானா


Advertisement

கொரோனா வைரஸ் எதிரொலி: வீட்டிலிருந்து பணியாற்றுமாறு ஊழியர்களுக்கு ட்விட்டர் அறிவுரை

இதைத்தொடர்ந்து, கடத்தல் தடுப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரஜ்வாலாவின் தலைவரான சுனிதா, லேசான இருமல் இருந்ததால் பாங்காக்கில் இருந்து திரும்பிய பின்னர் நேற்று தானாக முன்வந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் காந்தி மருத்துவமனையை அணுகினார். இதையடுத்து கோவிட் -19ன் சந்தேகத்திற்கிடமான மற்றும் நேர்மறையான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நோடல் மையமான மருத்துவமனையின் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் சோதனை முடிவு தனக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் சுனிதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸுக்கான சோதனை முடிவு தற்போதுதான் வந்தது. அது நெகட்டிவ் என வந்துள்ளது. என்ன ஒரு நிவாரணம். எனது நண்பர்களுக்கும் எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement