கையில் குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.. வைரலான புகைப்படம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் காவலர் ஒருவர் தனது குழந்தையுடன் பணிக்கு வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் கணவரும் மனைவியும் இணைந்து வேலைக்கு செல்வது கட்டாயம் ஆகிவிட்டது. ஆனால் இதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக வேலைபளு. காரணம் வீட்டில் உள்ள வேலைகளையும், அலுவலக வேலைகளையும் அவர்கள் கையாள வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது அரிதாக மாறிவிட்டது. அதிலும் வீட்டில் கைக்குழந்தை இருக்கிறது என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் தனது குழந்தைக்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் காவலர் செய்த செயல் ஒன்று ட்விட்டர் வாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.


Advertisement

image

உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நொய்டா வந்திருந்தார். அவரது பாதுகாப்பிற்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பணியில் பிரீத்தி ராணி என்ற பெண் காவலரும் இருந்தார். ஆனால் அவர் தனது ஒன்றரை வயது குழந்தையை இடது தோளில் சுமந்து கொண்டு தனது பணியை தொடர்ந்தார். இதனையடுத்து இவர் ஏன் குழந்தையை தூக்கி சுமந்துகொண்டு பணியில் ஈடுகிறார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.

டிக்டாக்கில் பிரபலமாகி பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்


Advertisement

image

3வது திருமணம்: தன்னைவிட 24 வயது இளைய பெண்ணை திருமணம் செய்யும் இங்கிலாந்து பிரதமர்!

இது குறித்து அவர் கூறும்போது “ எனது கணவர் தேர்வு எழுத சென்றுள்ளார். ஆதலால் அவரால் இன்று குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் எனக்கு எனது கடமையும் மிக முக்கியம். இதனால் குழந்தையுடன் பணிக்கு வந்து விட்டேன்” என்று கூறினார். இந்நிலையில் அவர் குழந்தையுடன் பணியில் நின்று கொண்டிருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்தப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

loading...
Related Tags : Supermomcop exam. utterpradesh

Advertisement

Advertisement

Advertisement