நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா அபாரமாக பந்துவீசி வருகிறது. இதனையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ஜ் நகரில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஹனுமன் விஹாரி 55(70), பிருத்வி ஷா 54(64), புஜாரா 54(144) ஆகியோர் அரைசதம் அடித்து சற்றே ஆறுதல் அளித்தனர். மயங்க் அகர்வால் 7, விராட் கோலி 3, ரஹானே 7, ரிஷப் பண்ட் 12, ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் முகமது சமி 12 பந்துகளில் 16 ரன்களும், பும்ரா 11 பந்துகளில் 10 ரன்களும் எடுத்தனர்.
கோலியின் சுயநலமா ? விளாசும் நெட்டிசன்கள் !
இதனையடுத்து, நியூசிலாந்து அணி நேற்று தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்தது. இந்திய வீரர்கள் முயற்சிக்கு பலன் ஏதும் கிடைக்கவில்லை. விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளதால் நிச்சயம் இரண்டாவது நாளில் நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் எளிதில் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அணி விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. இன்றைய ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் பிளண்டல் மற்றும் லாத்தம் பொறுமையாக விளையாடினர். ஆனால், பிளண்டல் 30 ரன்கள் சேர்த்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் பும்ராவின் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். மேலும், அனுபவ வீரரான ராஸ் டெய்லரும் வெகுநேரம் விளையாடவில்லை அவர் 15 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜடேஜாவின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த லாத்தம் 52 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய நிக்கோல்ஸ், வாட்லிங், சவுத்தி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
தொடரும் சொதப்பல் ஆட்டம்: விராட் கோலிக்கு என்னதான் ஆச்சு?
இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் ஷமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து தரப்பில் கிராண்ட் ஹோமும், ஜேமிசனும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகின்றனர். நியூசிலாந்து அணி 60 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!