JUST IN

தொடரும் சொதப்பல் ஆட்டம்: விராட் கோலிக்கு என்னதான் ஆச்சு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் விராட் கோலி.

சமீபகாலமாகவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் கவலைக் கொள்ளும் விதத்தில் உள்ளது. தொடர்ச்சியாக அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி ரன்களை குவித்து வந்தவர் விராட் கோலி. ஆனால், கடந்த சில போட்டிகளில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். அந்த வரிசையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

         image

கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய பிரித்வி ஷா 54(64) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, இந்திய அணியின் சரிவு தொடங்கியது. கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழக்க, துணைக் கேப்டன் ரஹானேவும் 7 ரன்களில் நடையை கட்டினார். 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

           image


"ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்" சவுரவ் கங்குலி 


கேப்டன் விராட் கோலி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சவுத்தியின் பந்துவீச்சில் மீண்டும் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். விராட் கோலியின் விக்கெட்டை அதிக முறை கைப்பற்றியவர் என்ற பெருமை சவுத்தியின் வசமே உள்ளது. இதுவரை அதிகபட்சமாக 10 முறை விராட் கோலியின் விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார்.

      image

விராட் கோலியின் மோசமான பார்ம் தொடர்வது இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. அவர் கடைசியாக விளையாடிய 5 சர்வதேச போட்டிகளில் 3, 19, 2, 9, 15 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறார். விராட் கோலி மோசமான ஆட்டமும் ஒருநாள் தொடரை இந்திய அணி இழப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இதுமட்டுமல்ல தொடர்ச்சியாக அவர் டிஆர்எஸ் முறையை தவறாக பயன்படுத்தி வருகிறார். எல்.பி.டபில்யூ முறை அவுட் கொடுக்கப்பட்டதில் இதுவரை அவர் 10 முறை டிஆர்எஸ் முறையை பயன்படுத்தியுள்ளார். இதில் இரண்டு முறை மட்டுமே அவர் தப்பியுள்ளார்.

            image


"சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விலகிச் சென்றிருக்கக் கூடாது"  - இன்சமாம் உல் ஹக் ! 


நியூசிலாந்து தொடரில் தொடரும் மோசமான பார்ம் காரணமாக விராட் கோலியின் ரன் சராசரி அனைத்து விதமான போட்டிகளில் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக டி20 போட்டிகளில் 52.73இல் இருந்து 50.80 ஆக குறைந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 54.97இல் இருந்து தற்போது 53.93 ஆக குறைந்துள்ளது.

          image

இந்திய அணிக்கு ஒன் மேன் ஆர்மியாக இருந்து பல வெற்றிகளை குவித்து தந்தவர் கேப்டன் விராட் கோலி. ஆனால், அவரது தற்போதைய பார்ம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு சாதனைகளில் இருந்து பின்னடைவை சந்திக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

Advertisement: