தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த இஸ்லாமியரும் குடியுரிமையை இழக்க மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, டெல்லியின் வடகிழக்கு பகுதி போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 39 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் பாரதிய ஜனதா சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமையை இழப்பார்கள் என எதிர்க்கட்சிகள் தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், இந்தச் சட்டத்தை எதிர்த்து கலவரத்தில் ஈடுபடும் வகையில் மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாகவும் விமர்சித்தார். இஸ்லாமியரோ அல்லது மற்ற சிறுபான்மையினரோ இந்தச் சட்டத்தால் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்றும், குடியுரிமை வழங்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?