“டெல்லியில் கடந்த 60 மணி நேரத்தில் ஒரு அசம்பாவிதம் இல்லை” - காவல்துறை அதிகாரி தகவல்

No-violence-reported-in-last-60-hours-said-Delhi-Police-Special-Commissioner

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை நிலை ஆளுநர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.


Advertisement

டெல்லி கலவரம் குறித்து மக்கள் மனத்தில் நிலவி வரும் அச்சத்தைப் போக்கி இயல்பு நிலைக்கு கொண்டுவர உள்துறை அமைச்சக அதி‌காரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே வன்முறையால் சேதமான பகுதிகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு இடமாக சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியதோடு சேதவிவரம் கேட்டறிந்தார்.

image


Advertisement

இந்நிலையில் டெல்லியில் இயல்பு நிலை மிக வேகமாக திரும்பி வருவதாக அம்மாநில காவல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய‌ அவர், கடந்த 60 மணி நேரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி வன்முறையில் இரண்டாயிரம் கிலோ உடைந்த செங்கற்கள்

மேலும் பேசிய அவர், “டெல்லியில் மிக வேகமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. கடந்த 3 நாட்களாக அரசியல் தலைவர்கள், பொதுமக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மக்களும் இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தங்கள் அலுவல்களை தொடங்க வேண்டும் என்றும் மக்கள் விருப்பத்தில் உள்ளனர்” என்றார்.


Advertisement

image

டெல்லியில் வன்முறையால் வடகிழக்கு பகுதி உருக்குலைந்து காணப்படுகிறது. வன்முறைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 123 FIR பதிவு செய்யப்பட்டு 630க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement