JUST IN

உசிலம்பட்டி அருகே தீயில் சிக்கி உயிரிழந்த 30 மாடுகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உசிலம்பட்டி அருகே மாட்டுப்பண்ணையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 பசு மாடுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவியுடன் சொந்தமாக 53 மாடுகளையும், 100க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்த பசு மாடுகளை வைத்து பால் கறவை தொழிலும் செய்து வந்துள்ளார்.

image

வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..!

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பண்ணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பண்ணையில் கட்டியிருந்த 53 மாடுகளில் 40 பசு மாடுகள் தீயில் சிக்கின. அதில் 30 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 10 மாடுகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன.

image

டெல்லி வன்முறைக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் - பிரகாஷ் ஜவடேகர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறை அதிகாரிகள் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் சௌந்தர்யா, உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சார்லஸ் நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement: