முதலமைச்சரின் வேளாண் மண்டல அறிவிப்பு ஏமாற்று வேலை டிடிவி தினகரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

முதலமைச்சரின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு ஏமாற்று வேலை என அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் மிகப்பெரிய வேளாண் பகுதியாக காவிரி டெல்டா பகுதி காணப்படுகிறது. இங்குள்ள விவசாய நிலத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், உள்ளிட்ட எண்ணெய் வளங்களை எடுப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த முயற்சி எடுத்தது. இதனிடையே சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.


Advertisement

image

 

டெல்லி வன்முறை: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு!


Advertisement

இந்நிலையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,

image

வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு - இந்தியன் ஆயில் நிறுவனம்

மத்திய அரசின் ஆதரவுடன் தமிழக அரசு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் முதலமைச்சரின் வேளாண் மண்டல அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என்றும் கூறினார். மேலும் “ முதன்முதலாக, என்.சி.ஆர். என்.பி.ஆர் போன்றவற்றைக் கொண்டு வரும்போது, அதற்கு திமுக ஆதரவளித்தது. மக்கள் மீதும், தொண்டர்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் பிரசாந்த் கிஷோரை திமுக இறக்கியுள்ளது. ஆளுங்கட்சி பண பலத்தையும், எதிர்க்கட்சி கூட்டணியையும் நம்பி உள்ளது. ஆனால் அமமுக மக்களை நம்பி இருக்கிறது” எனக் கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement