ஆட முடியுமா ? என்ன சொல்ல வருகிறார் தோனி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி வீடியோ கேம் விளையாடுவது போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Advertisement

13 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. 8 அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை அண்மையில் வெளியானது. அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொண்டது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

image


Advertisement

"எங்கள் நாட்டில் விளையாடுங்கள்" - இந்தியாவிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை ! 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு அவர் எந்தக் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் ஓய்வு முடிவு குறித்த சலசலப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தன. இந்தச் சமயத்தில் பிசிசிஐ வெளியிட்ட இந்திய வீரர்களின் பட்டியலிலும் தோனியின் பெயர் இடம் பெறாமால் இருந்தது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த தோனி ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளங்களில் கொட்டித்தீர்த்தனர். இருப்பினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதால் அதனை காணும் உற்சாகத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

image


Advertisement

"கோலியை குறி வச்சு தூக்குனோம்" ட்ரெண்ட் போல்ட் ! 

சிஎஸ்க கேப்டன் தோனி மார்ச் 1 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்றும் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய சிகை அலங்காரத்துடன் "ஆட முடியுமா" என்ற வார்த்தை இருக்கும் வீடியோ கேமை தோனி விளையாடுவது போன்ற புகைப்படத்தை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே ரசிகர்களை வெறி ஏற்றும் விதமாக இனி இதுபோன்ற புகைப்படங்களை தோனியும், சிஎஸ்கே நிர்வாகமும் அடிக்கடி வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement