JUST IN

TopNews | இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து; அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்.

கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலி. காயமடைந்த 9 பேருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

image

நேபாளத்திலிருந்து சுற்றுலா வந்த 5 பேர் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழப்பு. திருப்பூரில் நடந்த மற்றொரு விபத்தில் 3 பெண்கள் உட்பட 10 பேர் பலி.

சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரம்.

ஷாகின் பாக் போராட்டக்காரர்களுடன் மூவர் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை.

Image result for அமித்ஷா கெஜ்ரிவால்

இஸ்லாமிய மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய திமுக காத்திருக்கிறது. சிஏஏ ஆதரவு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து பிரதிகள் குடியரசு தலைவரிடம் ஒப்படைப்பு. சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் வலியுறுத்தல்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம். உலமாக்களின் ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் முதல்வர் அறிவிப்பு.

Image result for எடப்பாடி

இடைத்தரகர் ஜெயக்குமாரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி. குரூப் 2ஏ, விஏஓ தேர்வு முறைகேடுகள் பின்னணி குறித்து தெரிய வாய்ப்பு.

சீனாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. பரிசோதனைகள் முடிந்ததை அடுத்து ஜப்பான் கப்பலில் இருந்தவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

Image result for கொரோனா

இந்திய சுற்றுப்பயணத்தின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை. அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் போடப்படும் என அதிபர் ட்ரம்ப் உறுதி.

Advertisement: