JUST IN
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • BREAKING-NEWS ‌கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை தாண்டியது
  • BREAKING-NEWS ‌சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை
  • BREAKING-NEWS ‌கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட நிதியாக வழங்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ‌10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் - முதல்வர் பழனிசாமி

டெல்லியில் தமிழகத்தின் சார்பில் வந்த அலங்கார ஊர்தி: கவனம் ஈர்த்த அய்யனார் சிலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் வந்த அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

இன்று 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

image

ராஜ பா‌தையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. இதில் தமிழ்நாடு சார்பிலான அணிவகுப்பில் தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

image

முன்னதாக அய்யனார் சிலையில் பூணூல் அணிவித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு பதிலளித்த சிலையை வடிவமைத்தவர், இந்த‌ அய்யனார் சிவனுடைய அம்சம் என்பதால் பூணூல் அணிவித்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

Advertisement: