JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

நேபாள விடுதியில் வாயுக் கசிவு: இந்தியர்கள் 8 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நேபாளத்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் நேபாளத்திற்கு சென்றிருந்தனர். இவர்கள் எவரெஸ்ட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கதவு, ஜன்னல்கள் என அனைத்தையும் இறுக்கமாக மூடியிருந்த அவர்கள், குளிர் காய்வதற்காக GAS HEATER ஐ பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதிய காற்றோட்ட வசதி இல்லாத சூழல் ஏற்பட்டு வாயு நெடியில் சிக்கி 8 பேரும் உயிரிழந்ததாக விடுதி மேலாளர் கூறியுள்ளார்.

image

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர நேபாளத்திற்கான இந்திய தூதரக அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்‌. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ‌இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியுடன் அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


6 மணி நேரம் காத்திருந்து வேட்புமனுவை தாக்கல் செய்த கெஜ்ரிவால்


 

Advertisement: