சமூகத்தின் பெயரை சொல்லி திட்டிய மேலாளர் ? - ஊழியர் தற்கொலை முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டுக்கல்லில் ஆவின் பொதுமேலாளர் திட்டியதால் ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தமிழக அரசின் ஆவின் தொழிற்கூடம் உள்ளது. இதில் வெண்ணெயை உருக்கி நெய்யாக்குவது, பால் பாக்கெட் தயார் செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு ஆவின் ஊழியராக வேலை பார்ப்பவர் ஜஸ்டின் திரவியம். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, அவரிடம் வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுமாறு பொதுமேலாளர் தினகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அந்த பணியில் ஜஸ்டின் திரவியம் ஈடுபட்டபோது, நெய் உருக்கும் பாய்லரில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை பணியிலிருந்த கண்காணிப்பாளர் பிரேமிடம் தெரிவித்துவிட்டு, ஜஸ்டின் திரவியம் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமேலாளர் தினகர பாண்டியன், ஜஸ்டின் திரவியம் பணியில் இல்லாததைக் கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். பின்னர் அவரை, சமூகத்தின் பெயரை சொல்லியும், குடும்பத்தைப் பற்றியும் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.


Advertisement

image

இதனால் மனமுடைந்த ஜஸ்டின் திரவியம், நேற்று பணிக்கு வந்த பின்பு ஆவின் தொழில் கூடத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட பணியில் இருந்த சக ஊழியர்கள், அவரை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

கிரிக்கெட் ரசிகையான மூதாட்டி ‘சாருலதா’ காலமானார்

loading...

Advertisement

Advertisement

Advertisement