மீண்டும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா: இந்தியா முதலில் பேட்டிங் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.


Advertisement

Image result for india vs australia

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இன்றையப் போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.


Advertisement

Image result for manish pandey

ராஜ்கோட்டில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், மார்கஸ் லபுஷானே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ஆஷ்டன் அகர், பாட் கமின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா.


Advertisement

இந்திய அணி: ரோஹித் ஷர்மா, தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி. ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஜடேஜா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், முகமது ஷமி. ஜஸ்ப்ரீத் பும்ரா.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement