JUST IN
  • BREAKING-NEWS ‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS ‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
  • BREAKING-NEWS ‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு
  • BREAKING-NEWS ‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
[X] Close

5 லட்சத்திற்கும் மேலான மக்கள் இதுவரை சொந்த ஊர் பயணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில், சென்னையில் இருந்து, இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image result for pongal festival

தை மாத பிறப்பை தமிழர் திருநாளான காலங்காலமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் போகிப் பண்டிகையில் தொடங்கி பிறகு தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாய பெருமக்கள் உழவர் திருநாளான மாட்டுப் பொங்கல் அன்று உழவு மாடுகளை நீரோடைகளில் குளிக்க வைத்து, மஞ்சள் பூசி, மாலையிட்டு கொண்டாடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் இப்பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்டு போவர். பண்டிகைக்காக விடப்பட்ட பேருந்துகளில் ஏறி பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஆகவே சென்னை மாநகரமே அதிக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது. கிராமங்கள் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

Image result for pongal festival

இதுவரை இதற்காக சென்னையில் இருந்து கடந்த 10 ஆம் தேதி முதல் 10 ஆயிரத்து 517 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 5 லட்சத்து 50 ஆயிரத்து 890 பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். கடைசி நாளில், பயணிகளின் எண்ணிக்கை அதிகளவு இருக்கும் என்பதால், அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
[X] Close