குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

Opposition-meeting-on-Citizenship-Amendment-Act

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.


Advertisement

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு முறைக்கு எதிராக கூட்டு எதிர்ப்பு செயல் திட்டத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

image


Advertisement

எனினும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் கட்சி தனித்தே எதிர்க்கும் என்றும் அவர் கூறியிருந்தார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்


சபரிமலை வழக்கு - 56 சீராய்வு மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை


 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement