தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
வனக்காப்பாளர்
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
காலிப்பணியிடங்கள்:
வனக்காப்பாளர் - 227
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் - 93
மொத்தம் = 320 காலியிடங்கள்
இதையும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு!
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: ஜனவரி - 2020, 3ஆவது வாரம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி - 2020, முதல் வாரம்
ஆன்லைனில் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் - 2020
வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1. பொதுப் பிரிவினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
2. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் போன்றோருக்கு, குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
3. முன்னாள் ராணுவத்தினராக இருந்தால், குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்குள் (இராணுவப்பணி கழித்தது போக) இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.18,200 முதல் அதிகபட்சமாக ரூ.57,900 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
இதையும் படிக்க: நபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணி! - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.150
2. இதர வகுப்பினர் - ரூ.300
குறிப்பு:
ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
கல்வித்தகுதி:
வனக்காப்பாளர் பணிக்கு குறைந்தபட்சமாக, மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் (+2) அதாவது பிளஸ்டூ-வில் தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருத்தல் வேண்டும்.
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கு குறைந்தபட்சமாக, மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் (+2) அதாவது பிளஸ்டூ-வில் தேர்ச்சி பெற்றதுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் அல்லது தாவரவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் பயின்றிருத்தல் வேண்டும். அத்துடன் தகுதி பெற்ற போக்குவரத்து ஆணையத்தால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமத்தினை பெற்றிருத்தல் வேண்டும். கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாத பணி முன் அனுபவமும், வாகன பொது பழுதுநீக்கம் குறித்த அடிப்படை அனுபவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..!
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.forests.tn.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு செய்யும் முறை:
1. இணையவழி எழுத்துத் தேர்வு
2. உடற்தகுதி தேர்வு
3. உடற்திறன் தேர்வு
4. சான்றிதழ் சரிபார்ப்பு
குறிப்பு: ஆன்லைன் வழித்தேர்வு வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
மேலும், இது குறித்த முழுத்தகவல்களைப் பெற,
https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FG-FGDL-2019/FG_FGDL_2019_Tam_Notifn.pdf - என்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் பணி - விண்ணப்பிக்கத் தயாரா?
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை